#Breaking:தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,தற்போது தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மதியம் மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.