கூட்டணி குறித்து கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும் எனக்கு அதிகாரமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவலையடுத்து அண்ணாமலை இதற்கு விளக்கமளித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பணமில்லாத நேர்மையான அரசியல் நடைபெற்றால் தான் தமிழகத்தில் மாற்றம் என்பது வரும் என்ற நிலைக்கு தான் வந்துள்ளதாக கூறினார்.
மேலும் தனது நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடத்தில் தான் பேசி வருவதாகவும் தெரிவித்த அண்ணாமலை, கூட்டணி குறித்து நேரம் வரும்போது கட்சியின் தலைமை தெரிவிக்கும் என்று கூறினார். நான் எந்த கட்சிக்கும், தலைவருக்கும் எதிரி கிடையாது, சில மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக என் கருத்துகளை தெரிவித்திருந்தேன்.
வரும் காலங்களில் தெளிவாக இது குறித்து தான் விளக்கம் அளிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். அரசியலில் இப்படித்தான் செல்லவேண்டும் என முடிவுக்கு வந்துவிட்டேன், எனது நிலையில் இருந்து மாற்றித்தான் அரசியல் செய்யவேண்டும் என்றால் தனக்கு அரசியல் தேவையில்லை என்று அண்ணாமலை மேலும் கூறினார்.
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…