தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார்!!தமிழக காங்கிரஸ் தலைவர் அதிரடி
- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியானது.
- மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படுவதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர்.பின்னர் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியானது.
அதில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி ஆகும்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ஆம் தேதி நாகர்கோவிலில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.இதில் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் நடைபெற்றுவருகிறது .முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி போட்டி தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் .மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.