தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஆனது 23 வருடங்களுக்கு பிறகு பிப் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், குடமுழுக்கு தமிழில் தான் முறைப்படி நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிளும், பல தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கோவிலில் குடமுழுக்க ஆனது தமிழில் முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரி, ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரனையில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆனது ஆகம விதிகளின்படியே நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 27-ம் தேதி ஒத்திவைத்தனர். இதனால் பல அமையினரும் தொடர்ந்து கண்டம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை என்றால், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை அமல்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கூறினார். எனவே, இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், இதற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். குடியுரிமை திருத்த சட்டம், ஹைட்ரோ-கார்பன், பொதுத்தேர்வு பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் நடிகர் ரஜினி காந்த், தற்பொழுது பெரியார் குறித்து பேசி வருவதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…