எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி! ஈபிஎஸ் ட்விட்!
முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதலைமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார்கள், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்-5ம் தேதி இவ்வுலாகை விட்டு மறைந்தார். இந்நிலையில், இன்று இவரது 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.