கிருஷ்ணகிரி ஆணவ கொலை.! சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்.!
கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவ கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் திங்கள் மற்றும் செய்வாய் தினங்களில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கமான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரங்கல் தீர்மானம் :
இதில், முதற்கட்டமாக, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு நிறைவேற்றினார். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, உமயதுல்லா, சீனிவாசன், பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவன ஈர்ப்பு தீர்மானம் :
அடுத்ததாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த நபரை, பெண்னின் தந்தை நடு ரோட்டில் வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கோரி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து :
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, இந்த சம்பவம் தொடர்பான நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பர் என கூறியுள்ளார். அடுத்ததாக, காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.