டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவில் முறைகேடு.? கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்.!

Default Image

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். 

கடந்த வருடம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேர்ச்சி விவரம் அண்மையில் வெளியானது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக இன்று தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காரைக்குடி பயிற்சி மையம் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் மூலம் தேர்வு எழுதியவர்கள் பலர் சர்வையர் பணிக்காக தேர்வாகியுள்ளனர்.

தென்காசி பயிற்சி மையம் :

அதே போல, தென்காசியில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானம் :

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் கேள்வி எழுப்பினர்.இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளிக்கையில், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)