சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை..!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை
2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சற்று நேரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல்
புதிய திட்டங்களும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது முதல் வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈபிஎஸ் வருகை
இந்த நிலையில், தமிழக பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்துள்ளார்.