சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து ஆஜராக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி முறையில் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 160 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. சோதனை முறையில் இரண்டு வாரங்கள் அமல்படுத்த உள்ளனர்.
முதற்கட்டமாக இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வு மட்டுமே நேரடி விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…