வழக்கறிஞர்கள் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய விலக்கு.!

Default Image

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து ஆஜராக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி முறையில் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 160 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. சோதனை முறையில் இரண்டு வாரங்கள் அமல்படுத்த உள்ளனர்.

முதற்கட்டமாக இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வு மட்டுமே நேரடி விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman