வழக்கறிஞர் ஆர்.சுதா தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்!
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வழக்கறிஞர் ஆர். சுதா நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் அவர்கள் தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அவர்கள் கொடுத்துள்ள அனுமதியின் பெயரில், தமிழக மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் அவர்கள் தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளார். மேலும் லட்சத்தீவு மகிளா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சஜிதா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.