ஆளுநரை நாளை காலை சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..!
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை நாளை 11 மணிக்கு காலை சந்திக்கிறார்.
கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்த நிலையில், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதியானது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கும் பதிலளிக்காமல் இருந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை நாளை 11 மணிக்கு காலை சந்திக்கிறார்.