ஆளுநருடன் சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு…!

Default Image

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசி வருகிறார்.

கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்தது.

இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதியானது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்கப்பட்டது. தன்படி இன்று ஆளுநரை சந்திக்க அமைச்சர் ரகுபதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி, சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின் போது, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு தெரிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்