சட்ட திருத்தம் கொண்டு வரலாம் என கருத்து சொல்லலாம் – அமைச்சர் கடம்பூர் ராஜு
- பன்னாட்டு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
- சட்ட திருத்தம் கொண்டு வரலாம் என்று கருத்துச் சொல்வது அனைவரின் உரிமை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசானது கடந்த சில தினங்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. அந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதிலும், வட மாநிலங்கள் அசாம்,மேற்குவங்கம் ,டெல்லி ,தமிழகம் ,கர்நாடகா என பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாகி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், மக்கள் உணர்வுகளை தூண்டி, வன்முறைக்கு கொண்டு சென்று அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது.ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.குடியுரிமை தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுவரும் தீவிர போராட்டங்களை மத்திய அரசு கவனித்து வருகிறது, அதில் சட்ட திருத்தம் கொண்டு வரலாம் என்று கருத்துச் சொல்வது அனைவரின் உரிமை என்று தெரிவித்துள்ளார்.