முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் மாபெரும் இயக்கம் வெற்றி பெறும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டது பாராட்டத்தக்கது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளைக் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மத நல்லிணக்கத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது. நேர்மையான வெளிப்படையான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. மக்கள் விரும்பும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழ வேண்டும் கொரோனாவை எதிர்கொண்டு வெற்றிகரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணிக்க வேண்டும். மக்கள் பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்க போலீசார் பாரபட்சம் காண்பிக்கக் கூடாது. மக்களுக்குப் பயனளிக்கும் முன்னெடுப்புகளை விளக்கமாக தெரிவித்தால் அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என கூறினார். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பசுமை பரப்பினை 33% ஆக உயர்த்திட வேண்டும் என தெரிவித்தார்.
சென்னை : விஜயின் அரசியல் வருகை பற்றிய கேள்வி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. அந்த…
சென்னை : நாளை இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு தலைநகர்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள்…
தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.…
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த…
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…