இப்படி செய்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் – விஜயகாந்த்
போதை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல்.
விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் திடீரென புகுந்த கஞ்சா போதையில் இருந்த 2 ரவுடிகள் கடையில் இருந்த ஊழியர்களிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தட்டிக் கேட்ட சூப்பர் மார்க்கெட் ஊழியரான இப்ராஹீம் மீது கஞ்சா போதையில் இருந்த திமுக ரவுடிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த இப்ராஹீம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விஜயகாந்த் கண்டனம்
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போதை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். ரம்ஜான் நோன்பு பொருட்களை வாங்க சென்றபோது இப்ராஹிம் கொலை செய்யப்பட்டிருப்பது இஸ்லாமியர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இப்ராஹிம் ராஜாவின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த இப்ராஹிம் ராஜாவின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். (2-2) pic.twitter.com/icK7Eo2eCU
— Vijayakant (@iVijayakant) March 31, 2023