சட்டம் ஒழுங்கு கோமாவில் இருக்க காரணம் அந்தந்த காவல் துறையை மாவட்டத்திலுள்ள அதிமுகவினரே கவனிப்பதால் தான் என உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் உடனான நிலத்தகராறில் அதிமுக பிரமுகர் திருமணவேலு தூண்டுதலின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் செல்வனை கடத்திக் கொலை செய்ததாக புகார் எழுந்தது.செல்வனின் கொலைக்கு நியாயம் கேட்டு அவரது குடும்பத்தினர் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திமுக சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் செல்வன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று நள்ளிரவில் அனிதா ராதாகிருஷ்ணனின் வீட்டின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்ம நபரால் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.
இதற்கான சிசிடிவி காட்சி அனிதா ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார், மேலும் உண்மையான குற்றவாளிகள் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணனின் காரை நோக்கியதாக இருவரை கைது செய்து இருந்தாலும், செல்வனை கொலை செய்தவர்களை காவல்துறையினர் இன்னும் கைது செய்யவில்லை.அதிமுகவின் அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் திருமணவேலு நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மக்கள் விரோத மசோதாக்களை சட்டமாக்க உதவுவது, தர்மயுத்தம் செய்தவரை செல்லாக் காசாக்குவது, டெண்டர்கள். முதல்வருக்கு இப்படி ஏகப்பட்ட பணிகள். ஆதலால் அவர் கவனிக்கும் காவல்துறையை அந்தந்த மாவட்ட அதிமுகவினரே ‘கவனிப்பர்’ போலிருக்கிறது! சட்டம் ஒழுங்கு கோமாவில் இருக்க இந்த கவனிப்பே காரணம். அதற்கு சிறந்த உதாரணம், தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் நிகழ்த்தப்படும் தொடர் மரணங்கள். சாத்தான்குளம் இரட்டை கொலைகளை தொடர்ந்து, அதே பகுதியிலுள்ள தட்டார்மடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகருடன் சேர்ந்து செல்வன் என்ற இளைஞரை கடத்தி கொலை செய்துள்ளார். என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…