ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது – ஓபிஎஸ்

Default Image

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில். சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது என ஓபிஎஸ் அறிக்கை. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல் மற்றும் கருப்பு கொடிகளை வீசியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்ற நிலையில், காலை மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருக்கடையூர் இன்று அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மயிலாடுதுறை தருமபுரி ஆதின திருமடத்திற்கு செல்லும் வழியில் தி.மு.க.வின் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேதகு ஆளுநருக்கு எதிரான இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மேதகு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில். சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது.

மேற்படி சம்பவத்தில் தி.மு.க.வின் தோழமை கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ள நிலையில், இது நிச்சயம் தி.மு.க. அரசிற்கு தெரிந்துதான் நடந்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்