தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி உள்பட 8 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி உள்பட 8 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை கேட்டு பெருவருத்தம் அடைந்தேன். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தினமும் நடைபெற்று வருவது கடும் கண்டனத்துக்குரியது.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போன்று விருதுநகர் மற்றும் வேலூரில் நடந்துள்ள கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மனதை உலுக்குகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும்.
குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் பாலியல் ரீதியாக நிகழும் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பெண்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் என போற்றப்படும் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…