தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.! திமுக அரசு மீது இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!

Default Image

ஆளும் திமுக அரசின் கீழ், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆளும் திமுக ஆட்சி பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது எனவும், தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை எனவும் திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி ஓர் ஆங்கில நாளிதழ் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து, அப்போது சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்தது. அதற்கான விருதும் வழங்கினார்கள். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்தது.

நான் ஒருமுறை பத்திரிகையாளர்களிடம் 36 மணிநேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றது என கூறினேன். ஆனால் காவல்துறை அதிகாரிகள் இல்லை இல்லை கடந்த 36 மணிநேரத்தில் 12 கொலைகள் தான் நடைபெற்றது என சொன்னார்கள். இதனை பார்த்தாலே தெரியும் தமிழக சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. என்று என குற்றம் சாட்டினார்.

தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக தற்போது மாறி இருக்கிறது. 2,138 பேர் பள்ளி கல்லூரி பகுதிகளில் போதை பொருள் விற்கிறார்கள் என முதல்வர் கூறுகிறார். ஆனால், அதில் சுமார் 140 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது. அப்போ மீதம் உள்ளவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டுள்ளாரா? அதனால் தான் கைது செய்யப்படவில்லையா ? எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், ராமநாதபுரத்தில் கடல் வழியாக நாட்டுப்படகின் மூலம் 325 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த பட்டுள்ளது. அதற்கு திமுக கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.தமிழக அரசு போதை பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. என தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் பற்றி குற்றம் சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் அவரது திமுக பொதுக்குழுவில் பேசுகையில், நான் தினமும் கண்விழிக்கையில் நமது கட்சிகாரர்களால் என்ன நடக்குமோ என பயந்து கண்விழிக்கிறேன். என அவரே கூறுகிறார். அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என ஸ்டாலினே கூறுகிறார். என குற்றம்

மேலும், முதல்வர் ஸ்டாலின், நடைபயணம் செல்லும்போது மருத்துவத்துறை அமைச்சரிடம் தனது மகன் நடித்த படம் எப்படி இருக்கிறது என கேட்கிறார் என குற்றம் சாட்டினார். அது பற்றி கூறுகையில், இதுவா முக்கியம் நாட்டை விட தன் வீட்டு பிரச்சனை தான் முக்கியம் என முதல்வர் நினைக்கிறார் என குற்றம் சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு குறித்து பேசலாம். என ஆளும் திமுக அரசு மீதான தனது குற்றசாட்டை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்