விசாரணை என்ற பெயரில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுகிறது திமுக அரசு என்று எதிர்க்கட்சி தலைவர் புகார்.
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்துக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் புகாரளித்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை. அம்மா க்ளினிக்கை மூடியதன் மூலம் ஏழை மீது அரசுக்கு அக்கறையில்லை என்பதை காட்டுகிறது.
விசாரணை என்ற பெயரில் அதிமுகவினரை அழைத்து சென்று அலைக்கழித்து பொய் வழக்குகள் போடுகின்றனர். வடகிழக்கு பருவமைழைக்கு முன்பே தூர்வாரியிருந்தால் மழைநீர் தேங்காமல் இருந்திருக்கும் என்று ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…