சட்டம், ஒழுங்கு ஆலோசனைக்கூட்டம்; காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

MKStalin MeetingSecpolce

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குற்றங்களை தடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சட்டம் மற்றும் ஒழுங்குநிலை குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன், தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், சிறைத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பொது மக்களின் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை நடுநிலை தவறாமல் செயல்படவேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

காவல்துறையில் மரணங்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், தேர்தல் வர இருப்பதால் காவல்துறை மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், மேலும் சமூக வலைதளங்களில் சாதி, மத கலவரங்களை தூண்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் இந்த கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்