தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருசக்கர வாகனம் சாலையில் இடறி சரக்கு லாரி டயருக்குள் விழுந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோடாங்கிபட்டி அடுத்த மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சின்னமனூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார்.
உப்பார்பட்டி விளக்கு என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர் திசையில் டிராக்டரை முந்துவதற்காக வலது புறமாக முன்னேறியப்படி டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை எதிர்பாக்காத வேல்முருகன் பதற்றத்தில் உடனடியாக பிரேக்கை அளித்தியதால் இருசக்கர வாகனம் சாலையில் தடுமாறியது அத்துடன் அதே வேகத்தில் சாலையில் சரிந்தபடியே சென்று லாரியின் டயருக்கு அடியில் சென்று சிக்கியது.
மேலும், லாரி டயரில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது . மற்றும் வேல்முருகன் தலைகவசம் அணிந்துச் சென்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குழந்தைக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. விபத்துக்கு காரணம் குறித்து லாரி ஓட்டுநர் ஜான் போஸ்கோவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…