தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்து வைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளத்தை தொடங்கிவைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முதலாமச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மே 6ம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனிக்கணக்காக வைக்கவும், மே 7 க்கு பிறகு வரும் நிதியை தனிக்கணக்காக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எளிதான நிவாரண நிதியை செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையத்தளம் சிறப்பாக இருந்ததால், அதன் முன்மாதிரியாக கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மொபைல், வெளிநாடு, உள்நாடு, கார்ப்பரேட் என எல்லா வகை நிதி வரவுகள் குறித்தும் இணைய தளத்தில் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மே 7ம் தேதி முதல் நேற்று வரை ரூ.472.62 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது என்றும் இதுவரை ரூ.241 கோடி கொரோனா தடுப்பு நடைவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசில் பிஎம் கேர்ஸ் என வைத்துள்ள கணக்கில் தணிக்கை கிடையாது, விவரம் கிடையாது எனவும் விமர்சித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு பட்ஜெட் தாக்களுக்கு முன்பாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…