முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் தொடக்கம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Default Image

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்து வைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளத்தை தொடங்கிவைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முதலாமச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மே 6ம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனிக்கணக்காக வைக்கவும், மே 7 க்கு பிறகு வரும் நிதியை தனிக்கணக்காக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எளிதான நிவாரண நிதியை செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையத்தளம் சிறப்பாக இருந்ததால், அதன் முன்மாதிரியாக கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மொபைல், வெளிநாடு, உள்நாடு, கார்ப்பரேட் என எல்லா வகை நிதி வரவுகள் குறித்தும் இணைய தளத்தில் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே 7ம் தேதி முதல் நேற்று வரை ரூ.472.62 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது என்றும் இதுவரை ரூ.241 கோடி கொரோனா தடுப்பு நடைவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசில் பிஎம் கேர்ஸ் என வைத்துள்ள கணக்கில் தணிக்கை கிடையாது, விவரம் கிடையாது எனவும் விமர்சித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு பட்ஜெட் தாக்களுக்கு முன்பாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்