RIPVijaykanth [File Image]
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் தொடங்கி 2.30 மணி நேரத்திற்கு மேலாக பயணித்து தேமுதிக அலுவலகம் வந்தடைந்தது. வழிநெடுக மேம்பாலங்கள், சாலைகள், வணிக வளாகங்கள், மொட்டை மாடி என அனைத்தில் இருந்தபடியும் மக்கள் கண்ணீர் சிந்தினர்.
மலர்களால் அலங்கரிக்கபட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடலை மனம் நொந்து அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இப்பொது, குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் இறுதிச் சடங்கில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இவரது இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாரு ஒரு மாற்றுக் கட்சியை சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, குறையேதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…