மறைந்த நடிகை சித்ராவின் கணவர் மோசடி வழக்கில் கைது..!
நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.05 கோடி மோசடி செய்ததாக ஹேம்நாத் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறுபடியும் கைது செய்தனர்.