கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட்!!சிறு பார்வை …
2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 8-ஆம் தேதி) தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது,தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடியாகவும் செலவு ரூ.2.04 லட்சம் கோடியாகவும் உள்ளது. பற்றாக்குறை ரூ.23,176 கோடியாக உள்ளது. ஆயத்தீர்வைகளின் மூலம் அரசுக்கு ரூ.6,998 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.காவல்துறைக்கு ரூ.7,877 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு ரூ.75,723 கோடியாக இருக்கும்.ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்களுக்கு ரூ.25,362 கோடி, சம்பள செலவினங்களுக்கு ரூ.52,171 கோடி, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.