ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே கல்வீச்சு தாக்குதல்.! காவல்துறை வழக்குகபதிவு.!
ஈரோடு கிழக்கு தொகுதி கிடைத்தேர்தல் பரப்புரையில் நேற்று இரவு திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சி தலைவர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இதனால் இடைத்தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
கல்வீச்சு : நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரம் அருகே காவிரி சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
பிரச்சாரம் நிறுத்தம் : இந்த சம்பவத்தில் நாம் தமிழர் மற்றும் திமுக கட்சியினர் 11 பேர் காயமடைந்தனர். மேலும் 3 காவல் துறையினரும் காயமடைந்தனர். இதில் சிலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்குப்பதிவு : இந்த சம்பவத்தை அடுத்து நாம் தமிழர் பிரச்சாரம் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது தாக்குதலில் ஈடுபட்ட திமுக – நாம் தமிழர் கட்சியினர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.