சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே திடீரென ஏற்பட்ட 20 அடி பள்ளம்!

நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது புதுச்சேரியை நெருங்குகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கி.மீ முதல் 140 கி.மீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாட்டங்களில் பயங்கர காற்றுடனும், இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது அங்கு திடீரென 20 அடிக்கு பள்ளம் உருவானது. அந்த பள்ளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025