மொழிப்போர் தியாகிகள் தினம்:முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை:மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று,சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதே சமயம்,அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,துரைமுருகன்,கேஎன் நேரு,மா.சுப்பிரமணியன்,ரகுபதி, உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.