குமரியில் மண்சரிவு – ரயில்கள் சேவைகள் முழுமையாக ரத்து..!

Default Image

குமரியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை சீரமைக்கும் பணி நடந்து வருவதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்லம்-திருவனந்தபுரம் தினசரி விரைவுரயில் (06425) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் -திருவனந்தபுரம் விரைவுரயில்(06426)  சேவை இன்று முழுமையாக ரத்து செய்கிறது. அதே போல திருவனந்தபுரம் – நாகர்கோவில் விரைவு ரயில் இன்று (06427) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் -நாகர்கோவில் விரைவு இரயில் (06435) சேவையின் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi