கன்னியாகுமரியில் நிலச்சரிவு – 3 முக்கிய ரயில்கள் ரத்து.. 8 ரயில்கள் சேவையில் மாற்றம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக ரயில்கள் சேவைகள் ரத்து என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு காரணமாக 3 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 8 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் – கன்னியாகுமரி – நாகர்கோவில் ரயில் (06426) இன்று இரு வழித்தடத்திலும் ரத்து செய்யப்பட்டது. திருவனந்தபுரம் – நாகர்கோவில் விரைவு பாசஞ்சர் ரயில் (06435) இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. புனலூர் – மதுரை விரைவு பாசஞ்சர் ரயில் (16730) இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர் – கொல்லம் மெயில் (16723) நாகர்கோவில் வரை மட்டுமே இன்று இயக்கப்படும். கொல்லம் – சென்னை எழும்பூர் மெயில் (16724) கொல்லம் – நாகர்கோவில் இடையே இன்று பகுதி சேவை ரத்தாகிறது. மேலும், பெங்களுருவில் இருந்து நேற்று புறப்பட்ட பெங்களூரு – குமரி விரைவு ரயில் (16526) திருவனந்தபுரம் – குமரி இடையே ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி – பெங்களூரு விரைவு ரயில் (16525) இன்று கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே பகுதி சேவை ரத்து. நாகர்கோவில் – கோட்டயம் விரைவு ரயில் (16366) நாகர்கோவில் – கொல்லம் இடையே இன்று பகுதி சேவை ரத்து. திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627) திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மேலும், திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22628) இன்று திருவனந்தபுரம் – திருநெல்வேலி இடையே பகுதி சேவை ரத்து என்றும் ஜாம்நகர் – திருநெல்வேலி விரைவு ரயில் (19578)இன்று திருவனந்தபுரம் – திருநெல்வேலி இடையே பகுதி சேவை ரத்து எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#UPDATES List of trains partially/fully cancelled today consequent to waterlogging in Nagercoil – Kanniyakumari & Eraniel – Nagercoil sections and restoration works, landslips between Nagercoil and Thiruvananthapuram. pic.twitter.com/ozTskONTwc
— DRM Trivandrum (@TVC138) November 14, 2021