நில அபகரிப்பு வழக்கு.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!
சென்னை , துரைப்பாக்கத்தில் நில அபகரிப்பு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரர் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை , துரைப்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான 8 கிரவுண்ட் நில விவகாரம் தொடர்பாக, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு பஞ்சாயத்தில் ஈடுப்பட்டு அவரது மருமகன் நவீன் குமார் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், எதிர் தரப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு : தன் மீதான காவல்துறை வழக்குப்பதிவில் உண்மையில்லை. அதனால், அதனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு ஜெயக்குமார் மீதான வழக்குப்பதிவுகளை ரத்து செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு : உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு செய்தது. இந்த வழக்கு விசாரணை இன்று வீரசாரணைக்கு வருகையில், இந்த வழக்கு குறித்து இன்னும் 4 வார காலத்திற்குள் பதில் கூற வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் வலக்கை ஒத்தி வைத்துள்ளது.