தோண்டப்பட்ட நகைகளில் லலிதா ஜுவல்லரி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கும் சொந்தமானவை-போலீஸ்..!
கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் நேஷனல் வங்கியின் சுவற்றில் துளையிட்டு 470 சவரன் நகைகளையும் , 17 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என தெரியாமல் 9 மாதங்களாக போலீஸார் திணறி வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜூவல்லரி சுவரை துளையிட்டு தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அது திருவாரூர் முருகன் மற்றும் அவரது நண்பர்கள் என தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் மதுரையை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் லலிதா ஜுவல்லரி மட்டுமல்லாமல் , பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்ததும் என தெரியவந்தது.
திருடிய நகைகளை மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள மலையடிவாரத்தில் புதைத்து வைத்திருப்பதாக கணேசன் தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து தனிப்படையினர் கடந்த புதன்கிழமை இரவு இடத்திற்கு அங்கு சென்றனர்.
கணேசன் சொன்ன இடத்தில் போலீசார் தோண்டினர். தோண்டிய இடத்தில்
காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு புதைக்கப்பட்டு வைத்திருந்த 3 கிலோ தங்க நகைகளில் ஒன்றரை கிலோ பஞ்சாப் நேஷனல் வங்கி நகையும் , மீதமிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் லலிதா ஜுவல்லரி சொந்தமானது என தெரியவந்தது.
இந்நிலையில் மேலும் ஆறு நாட்கள் கணேசனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.