லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும் – அன்புமணி ராமதாஸ் ட்வீட்
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுனர் குழு அறிக்கை அளித்து 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்று வரை ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்காதது ஏன்? அதற்கு தடையாக இருப்பது எது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும். லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். அத்தகைய அவலநிலை ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை இனியும் தாமதிக்காமல் பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள் விடுத்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும்; லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். அத்தகைய அவலநிலை ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை இனியும் தாமதிக்காமல் பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!(4/4) #StopSocioEconomicRisks
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 16, 2022