#Breaking:பெண்களே முந்துங்கள்…அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கம் விலை குறைவு!
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.இந்த வேளையில்,அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுவர்.ஏனெனில்,அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பொன் செரும் என்பது நம்பிக்கை.
இந்நிலையில்,அட்சயதிருதியை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால்,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து,கிராம் ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது.