“பெண்களே…காதலித்து ஏமாற்றுவோரை நினைத்து கவலை வேண்டாம்” – அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் “ஹெர் ஸ்டோரீஸ்” என்ற பெயரில் நேற்று பெண் எழுத்தாளர்கள் எழுதிய 6 புத்தகங்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து,விழாவில் பேசிய அமைச்சர் தான் அரசியலில் வந்த உடன் எனது பிள்ளைகளை கவனிக்க மறந்து விட்டதாகவும்,தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தன் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் எனவும்,மேலும்,அரசியலில் தான் இந்த நிலையை அடைவதற்கு தனது குடும்பமும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும்,தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “பாரதியார் பிறந்த ஊரான தனது ஊரில் பெண்கள் அதிகளவில் படித்து வருகிறார்கள் என்றும் குறிப்பட்டார்.அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த நிலைக்கு தான் வந்ததாகவும் கூறினார்.
இவ்வாறான சூழல் இருக்க காதலித்து ஏமாற்றுவோரை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றும்,பெண்கள் தங்கள் வாழ்வில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.