போதுமான டாக்டர்கள் இல்லாததால் அமைச்சர் தொகுதியில் மக்கள் வேதனை….

Default Image

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உயரதிகாரி, ஆய்வு செய்யாமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துக்களில் படுகாயமடைவோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

சிகிச்சைக்கு மருதுவமனையில் சேரும்   பெரும்பாலோனோர் சிகிச்சையில் திருப்தி இல்லை என்று சொல்கின்றர்கள். மகப்பேறு பிரிவு வார்டிலும் போதிய டாக்டர்கள் கிடையாது. இங்கு சுற்றுப்பகுதிகளில் இருந்தும் தினமும் சுமார் 10க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவ சிகிச்சையும், அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் 100க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடக்கிறது. போதிய டாக்டர்கள் இல்லாததால், மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகளுக்கு பிரசவ சிகிச்சை அளிப்பதில் சிரமநிலை ஏற்பட்டுள்ளது. சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படும் குடிநீர் டேங்குகளில் தேக்கி வைத்து  வழங்கப்படுகிறது. நீண்ட நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதால், பெரும்பாலான நாட்களில் மருத்துவமனையில் நோயாளிகள் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். இதனால் குடும்பத்தினர் வீடுகளில் இருந்து கேன்களில் தண்ணீர் கொண்டு வருகின்றனர்.மருத்துவ நிருவாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் கூட நடத்தினார்கள்.

கிராமங்களில் வருபவர்கள் கடைகளில் தண்ணீர் பாட்டில்களை விலைக்கு வாங்குகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீருக்கான சின்டெக்ஸ் காட்சி பொருளாக இருந்து வருகிறது. பொதுவாக நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சுடுநீர் வழங்கப்படுவதுண்டு. ஆனால் இங்கு சுடுநீர் கொதிகலன் இருந்தும் பயனற்று உள்ளது. சுடுநீரை டீக்கடை ஓட்டல்களில் விலைக்கு வாங்குகின்றனர்.மாத்திரை வழங்க தனித்தனி கவுன்டர்கள் இருந்தாலும், கூட்ட நெரிசலால்  பெண்கள் சிரமப்படுகின்றனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பலகடந்தும், குடிநீர், போதிய கழிப்பறை, மின்விளக்கு, படுக்கை வசதிகன்றி நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் மாநில கூடுதல் மருத்துவ இயக்குநர் (மருத்துவம்) அனைத்து வார்டு பிரிவிற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆப்போது, மருத்துவமனையில் டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதை கண்டு கொள்ளாமல் சென்றது நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்