தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீல் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நிலோபர் கஃபில் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என முதல்வர் ட்வீட்.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், உயிர் இழக்கவும் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவில் சென்னை மாநகராட்சியில் தான் கொரோனாவின் தாக்கம் உள்ளது. ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலருக்கு சிகிச்சை நடை பெற்றும் வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கஃபில் அவர்களுக்கும் அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது உடல் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கஃபீல் அவர்களுக்கு கொரோனா தொற்று என்ற செய்தி அறிந்ததும், @DrNiloferKafeel அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 17, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025