காங்கிரஸ் கட்சி ஒரு பெருங்காய டப்பா-இல.கணேசன்
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி மக்களவை தேர்தல் நேற்றுடன் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதன் பின்னர் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
அதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெரும் என்றும்,தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கருத்து கணிப்பு தொடர்பாக ஈரோட்டில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,திமுக பெருமைப்பட ஒன்றுமில்லை. தேர்தல் கருத்துக்கணிப்பில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜக 50% வெற்றி பெற வாய்ப்புள்ளது.அந்நிய நாடுகளிடமிருந்து எரிபொருட்கள் வாங்கும் நிலைமையை மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் .நிலத்தடியில் எரிபொருட்கள் உள்ளதா என்ற முடிவை பிரதமர் மோடி எடுக்கவில்லை ,முந்தைய அரசு அனுமதி கொடுத்ததால்தான் விளை நிலம் வழியாக குழாய் பதிக்கப்படுகிறது.தமிழகத்தில் பாஜகவுக்கு 2 இடம் கிடைத்தாலும் மிகப்பெரிய வெற்றிதான்.காங்கிரஸ் என்னும் பெருங்காய டப்பாவுடன் மற்றகட்சிகள் இணைவது சாத்தியமில்லை.அமமுக வாக்குகளை பிரிப்பதால அதிமுக தோல்வி அடையலாம் என்று தெரிவித்துள்ளார்.