முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எல்.முருகன்

முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் எல்.முருகன்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார், உடலநலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தினார்.ஏற்கனவே இன்று காலை முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து, அவரது தாயார் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025