“விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி தருக”- முதல்வரிடம் பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்க முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், விநாயகர் சதுர்த்தியன்று அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025