ஆளுநரை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அனுமதி அளித்ததற்கு ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் முருகன்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.
இதனிடையே தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டது. பின்னர் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ,பாஜக மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா மற்றும் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.அப்பொழுது , அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.