ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எல்.முருகன்..!

Default Image

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

 இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வரும் ஆன திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay