கலந்துரையாடல் கூட்டத்தை புறக்கணித்த எல்.முருகன்., விவசாயிகள் ஏமாற்றம் ..!
வேளாண் சட்டம் குறித்து விவசாயிகள் உடனான கலந்துரையாடலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்தார்.
மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். தாராபுரம் தொப்பம்பட்டியில் விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது உயர்மின் கோபுரம், எட்டு வழி சாலை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பகல் 2 மணிவரை விவசாயிகள் காத்திருந்தும் எல்.முருகன் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.