தமிழகத்தில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 6 ஆம் தேதி காலை தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் பலரை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், இன்று இரண்டாம் நாளாக கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை வேல் யாத்திரை தொடங்கியது. அரசின் அனுமதியை மீறி இந்த ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், வேல்யாத்திரையின் 2 ஆம் நாளிழும் பாஜக தலைவர் எல்.முருகன், இல.கணேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திருவொற்றியூரில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பியின் உத்தரவை எதிர்த்து, பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…