KVeeramani: பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை… திக தலைவர் கி.வீரமணி விமர்சனம்!

asiriyar k.veeramani

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சிக்கு, அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து பேசியதற்கு அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், கூட்டணி தொடர்வதாக கூறி வந்தனர். ஜெயலலிதா, அண்ணாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலை விமர்சித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிமுக – பாஜக கூட்டணி, தற்போது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுதான் அதிமுகவின் முடிவு எனவும் கூறியிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி விரிசல் குறித்து திக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பது போன்ற செய்திகள் நேற்று தொலைக்காட்சி ஊடகங்களில் முதலிடம் பிடித்துள்ளன.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டே திராவிடர் இயக்கத்தையும், ஆட்சியையும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அ.தி.மு.க. தலைவர்களையும் இழிவாக பேசி வருகிறார். விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக இந்த விபரீத வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக என்ற அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி பாஜகவுடன் உறவை உறுதி செய்தால், அதைவிட மிகப்பெரிய அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்