ஒட்டகம் மேய்க்கும் வெளிநாட்டு வேலை.. ஒரே வாரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்.!
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன் எனும் நபர், குவைத் நாட்டிற்கு வேலை சென்ற இடத்தில் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த குடும்பத்தார் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இங்கு இருக்கும் போது ஒரு வேலை சொல்லி அந்த வேலைக்காக பணியாட்களை எடுத்துவிட்டு, வெளிநாட்டிற்கு சென்றவுடன் அங்கு வேறு வேலையில் பணியமர்த்தும் அவலங்கள் தொடர்ந்து அங்கங்கே நடைபெற்று தான் வருகிறது.
அப்படி தான் திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தந்தை பெயர் ராஜப்பா. மனைவி வித்யா, இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒருவர் 12ஆம் வகுப்பும், இன்னொருவர் 3ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
முத்துக்குமரன் தொழிலில் நஷ்டமடைந்த காரணத்தால், வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அதன் மூலம் குவைத் நாட்டிற்கு சேர்ன்றுள்ளார். அவருக்கு கிளீனிங் வேலை என கூறிவிட்டு ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளனர்.
இது குறித்து முத்துக்குமரன் புலம்பியுள்ளார். மேலும் தன்னை திருப்பி இந்தியாவுக்கு அனுப்புமாறு ஏஜென்டிடம் கேட்டுள்ளார். அவர் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
இப்படி இருக்க கடந்த 7ஆம் தேதி போனில் பேசிக்கொண்டு இருக்கும் போதே போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அதன் பின்னர் முத்துகுமாரனை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகு ஏஜென்டிடம் இருந்து கால் வந்துள்ளது. அதில் அந்த ஏஜென்ட் முத்துகுமார் அங்குள்ளவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இறந்ததாக கூறியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தார். தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் முத்துக்குமரன் குடும்பம் புகார் அளித்துள்ளது. முத்துக்குமரன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதற்கு உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.