kuwait fire -tn [file image]
குவைத் : தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது 7ஆக அதிகரித்துள்ளதால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்றைய தினம் 2 தமிழர்கள் உயிரிழந்தாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை பாலியனோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தற்பொழுது, அந்த தீ விபத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை, கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த வீராசாமி, முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, ராஜு எபினேசர், ராமு உட்பட மொத்தம் 49க்கும் மேற்பட்ட பலியாகியுள்ளனர்.
இதனிடையே, இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்று குவைத் என்பிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…